வசதியானவர்களை குறி வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டு…. ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் : போலீசாரிடம் சிக்கிய பெண்கள்!!

326

கேரளா…

கேரளா மாநிலத்தில் பணம் மோசடிகளில் தொடர்ச்சியாக பெண்கள் கும்பல் சிக்கி வருவது வாடிக்கையாகியுள்ளது. மேலும், மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கலாச்சாரமும் அங்கு தலை தூக்கியுள்ளது.

கல்வி அறிவில் சிறந்து விளங்கும் அண்டை மாநிலமான கேரளாவில் அதிர வைக்கும் குற்ற சம்பவங்கள் ஆச்சரியத்தையும் கொடுத்து வருகிறது.

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ஷநவாஸ் (32). இவரது வாட்சப் எண்ணிற்கு நவுபியா என்ற பெண் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

புது எண் என்பதால் ஷநவாஸ் அந்த மெசேஜுக்கு பதில் அளிக்காமல் விட்டுள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் மருத்துவரின் எண்ணுக்கு நவுபியா ஆபாச படங்கள் அனுப்ப தொடங்கியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மருத்துவர் ஷநவாஸ், நீங்கள் யார்? எதற்காக இப்படி செய்கிறீர்கள்? என வாட்சப்பில் மெசேஜ் மூலமாக கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த நவுபியா என்ற பெண், நீங்கள் என்னை வன்கொடுமை செய்துவிட்டதாக போலீசில் புகார் கொடுக்க போகிறேன் என்றும் உடனடியாக 3 லட்ச ரூபாயை கொடுக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்த பெண் மிரட்டியுள்ளார்.

அதற்கு மருத்துவர் ஷநவாஸ் மறுக்கவே, துபாயில் இருந்து இன்டர்நெட் கால் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் மருத்துவர் ஷநவாஸை மிரட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து மருத்துவர் ஷநவாஸ் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். விசாரணையை தொடங்கிய போலீசார் தங்களது பாணியில் நவுபியாவை பிடிக்க திட்டம் வகுத்தனர்.

அதன்படி, மருத்துவர் மூலமாக நவுபியாயா கேட்ட 3 லட்சம் ரூபாயை கொடுப்பதாகவும், அதற்கான இடத்தையும் தேர்வு செய்யுமாறு நவுபியாவிடம் கூறியுள்ளனர். அதற்கு பதிலளித்த நவுபியா, பெங்களூருவில் இருந்து நிஷா என்ற பெண்ணை அனுப்பி வைப்பதாகவும், அவரிடம் பணத்தை கொடுத்துவிடுமாறும் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக மருத்துவர் பேசுவதை போலவே நவுபியாவிடம் போலீசார் உரையாடி தகவலை சேகரித்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று பெங்களூருவில் இருந்து திருச்சூர் வந்த நிஷாவை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அவர் மூலமாக இந்த திட்டத்தில் மூளையாக செயல்பட்ட நவுபியாவையும் கைது செய்தனர்.