வயிற்றில் குழந்தை என 7 மாதமாக சிகிச்சையளித்த மருத்துவர்.. திடீரென ஏற்பட்ட வலி! ஸ்கேனில் தெரியவந்த அ.திர்ச்சி உண்மை!!

578

அஸ்வினி………..

பெண்ணின் வயிற்றில் கட்டியை குழந்தை என கூறி 7 மாதமாக சிகிச்சையளித்து வந்த அரசு மருத்துவர் மீது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி அஸ்வினி (22).

இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அஸ்வினி ஓராண்டுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் கல்லாவியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.

பரிசோதனையில் அஸ்வினி கர்ப்பமாக இருப்பதாக கூறிய மருத்துவர், கடந்த ஏழு மாதங்களாக கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் மருந்து, மாத்திரி, ஊசி என கொடுத்து சிகிச்சை அளித்துள்ளார்.

அஸ்வினி பெயரில் தனியாக தாய் மற்றும் சேய் நலக் காப்பகம் மூலம் அட்டை கொடுத்து அதில் வார வாரம் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் 19ம் தேதி மாதாந்திரப் பரிசோதனைக்குச் சென்றபோது அஸ்வினி வயிற்று வலி இருப்பதாக மருத்துவரிடம் கூறியதையடுத்து, மருத்துவர் ஸ்கேன் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றில் குழந்தை எதும் இல்லை என்றும் நீர்கட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மற்றொரு ஸ்கேன் சென்டருக்கு சென்று ஸ்கேன் செய்த போது அதிலும் குழந்தை இல்லை நீர்கட்டி என்பது உறுதியாகியுள்ளது.

அதன் பிறகு உடனே அஸ்வினியும் அவரின் உறவினர்களும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று மருத்துவர்களிடம் கேட்டதற்கு, மருத்துவர் ‘சாரி தெரியாம நடந்திருச்சு’ என கூலாக பதிலளித்துள்ளார்.

கர்ப்பத்திற்கும், நீர்கட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் சிகிச்சையளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஸ்வினியின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.