வயிற்றுக்குள் இருந்த புதையல் : அறுவை சிகிச்சையில் உறைந்து போன மருத்துவர்கள்!!

542

துருக்கி…

துருக்கியில் ஒருவரது வயிற்றுக்குள்ளிருந்து 233 பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் விளையாட்டுத்தனமாக காசு, ஊக்கு உட்பட சில பொருட்களை விழுங்கி விடுவார்கள். இதுபோன்ற சில செயல்களை சில சமயம் பெரியவர்களும் செய்வார்கள்.

இந்நிலையில், துருக்கியை சேர்ந்த 35 வயது நபருக்கு திடீரென பயங்கரமான வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை அவரது சகோதரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தார். மருத்துவர்கள் அந்த நபரின் உடலை ஸ்கேன் செய்து பரிசோதனை செய்தனர்.

ஸ்கேன் பரிசோதனை செய்தபோது அந்த நபரின் வயிற்றுக்குள் ஊசி, ஊக்கு, நகம், சில்லரை காசுகள் என 233 பொருட்கள் இருந்தது.

இதைப் பார்த்ததும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து, அந்த நபரின் வயிற்றுக்குள்ளிருந்த பொருட்களை முழுவதையும் வெளியே எடுத்து அந்த நபரின் உயிரை காப்பாற்றியுள்ளனர். ஒருவர் இந்த அளவுக்கு பொருட்களை விழுங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.