வரதட்சணை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சோகம்!!

710

தமிழகத்தில் வரதட்சனை கேட்டு கொடுமை செய்த கணவனால் 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் அழகிரி காலனியைச் சேர்ந்தவர் பிரேமா, இவர் குடிதாங்கி சேரியை சேர்ந்த மாசிலாமணி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து பிரேமா 7 மாத கர்ப்பமக இருந்துள்ளார், இந்நிலையில் மாசிலா மணி, பிரேமாவிடம், அவர்கள் வீட்டில் வரதட்சணையாக மினிவேன் வாங்கித்தரும் படி கூறியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இதுகுறித்து மாசிலாமணி அவரை தொந்தரவு செய்து வந்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதுகுறித்த தகவல் உறவினர்களுக்கு தெரியவந்ததால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த பொலிசார் அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவரது குடும்பத்தினர் பிரேமாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.