வலிமை பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்.. ஏமாற்றம் அடைந்த பிரபலம்!!

466

வலிமை…

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், வலிமை திரைப்படம் குறித்து சமீபத்தில் இயக்குனர் எச். வினோத் பேட்டியளித்துள்ளாராம்.

இதில் ‛அஜித் கதையைகேட்டதும், வில்லன் கதாபாத்திரத்துக்கு பிரசன்னா அல்லது அர்ஜுன் தாஸ் பொருத்தமாக இருப்பதாகச் சொன்னதாக,’ குறிப்பிட்டார்.

இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் பிரசன்னா, ‛எனது அன்புக்குரிய தல என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பதில் பெருமகிழ்ச்சி.

வலிமை வாய்ப்பு கை நழுவியதில் ஏமாற்றம்தான் என்றாலும் கூட பெரிய விஷயங்கள் என்னை சேரும் என்று நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.