வாழைத்தோப்புக்குள் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பயங்கரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1155

வேலூர்……

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிக்குப்பத்தை சேர்ந்தவர் சரத்குமார் (25). இவர் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது.

அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மீது நீண்ட நாட்களாக சரத்குமாருக்கு தீராத ஆசை இருந்து வந்துள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக பார்ட் டைமாக துணிக்கடையில் கல்லூரி மாணவி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், வேலை முடித்துவிட்டு கத்தாரிக்குப்பம் வரை பேருந்தில் வருவார். பின்னர், அவரது தந்தை டூவிலரில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவி வழக்கம்போல் துணி கடைக்கு சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் கத்தாரிக்குப்பம் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தார்.

ஆனால், அவரது தந்தை வரவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சரத்குமார் மாணவியின் வாயை பொத்தி வலுக்கட்டாயமாக வாழைத்தோட்டத்திற்குள் இழுத்து சென்று கதற கதற பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் கட்டாயப்படுத்தி மீண்டும் மீண்டும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என கல்லூரி மாணவியை மிரட்டி அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு சென்றதுமே நடந்த சம்பவத்தை கூறி பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.