விண்வெளிக்குப் பறக்கப்போகும் 3-வது இந்தியப் பெண்!

523

கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்சுக்குப் பின்னர் விண்ணுக்குப் பறக்கும் மூன்றாவது இந்தியப் பெண்ணாக ஷாவ்னா பாண்ட்யா இருக்காலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கனடாவின் ஆல்பர்ட்டாவில் பிறந்த ஷாவ்னா, பொது மருத்துவம் முடித்து, பயிற்சி அறுவைசிகிச்சை நிபுணராக பணியாற்றிவருகிறார்.

தற்போது குடிமக்கள் அறிவியல் விண்வெளி வீரர் திட்டத்தின் கீழ் இரண்டு பேரில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இந்த இருவரும், 8 விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து இந்த ஆண்டு விண்வெளிக்குப் பறக்கவிருக்கிறார்கள்.

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஷாவ்னா, விவரம் தெரிந்த நாள் முதல், விண்வெளிதான் என் மனதைக் கொள்ளைகொண்ட விடயம் என கூறியுள்ளார்.

மேலும், பள்ளியில் நான் செய்யும் அறிவியல் சம்பந்தமான செயல்திட்டங்கள்கூட விண்வெளி சார்ந்ததாகவே இருக்கும். அது தொடர்பான புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்து என் அறிவை வளர்த்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

உலக வெப்பமயமாதலுடன் தொடர்புடைய குறிப்பிட்ட வகை மேகங்கள் குறித்து ஆராய்வதும், புவியீர்ப்பற்ற சூழல், மனோவியல், உடலியல் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்வதும் அத்திட்டப் பணிகளின் அடிப்படை.

அவற்றில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு ஷாவ்னா செயல்பட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.