வித்தியாசமாக யோசித்து ‘LOVE’ ப்ரோபோஸ் செய்த இளைஞர் : உடனே க்ரீன் சிக்னல் காட்டிய இளம்பெண்!!

654

மகாராஷ்டிரா….

மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரைச் சேர்ந்தவர் சௌரப் கஸ்பேகர். இவரும் சாங்லி பகுதியை சேர்ந்த உத்கர்ஷா என்ற பெண்ணும் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்து வருந்துள்ளனர்.

இந்த நிலையில், சௌரப் கஸ்பேகருக்கு வீட்டில் திருமண பேச்சு எடுத்துள்ளனர். அப்போது கல்லூரியில் தன்னுடன் படித்த உத்கர்ஷா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது பெற்றோரும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.

ஆனால் விஷயம் என்னவென்றால், அதுவரை உத்கர்ஷாவிடம் சௌரப் கஸ்பேகர் காதலை சொல்லாமல் தான் இருந்துள்ளார். தற்போது பெற்றோரும் சம்மதம் தெரிவித்துவிட்டதால், உத்கர்ஷாவிடம் தனது காதலை புதுமையாக சொல்ல வேண்டும் என்று நினைத்துள்ளார்.

இதனை அடுத்து, சாங்லி-கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ‘உத்கர்ஷா, என்னை திருமணம் செய்துகொள்’ என்ற வாசகத்துடன் பேனர் வைத்துள்ளளார். இதனைத் தொடர்ந்து பேனர் வைத்த இடத்துக்கு உத்கர்ஷாவை அழைத்து வந்த சௌரப் கஸ்பேகர், அந்த பேனர் முன் உத்கர்ஷாவிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த உத்கர்ஷா, கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இவர்களது திருமணம் வரும் மே 27-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில் பேனர் வைத்து உத்கர்ஷாவிடம் சௌரப் கஸ்பேகர் காதலை வெளிப்படுத்திய போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.