விபத்தில் மரணித்த கணவர்! நிறைமாத கர்ப்பிணி மனைவியின் நெகிழ்ச்சி முடிவு

994

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றும் முத்துக்கிருஷ்ணன் என்பவர், லாரி விபத்தில் இறந்துபோனார்.தகவல் அறிந்த பொலிசார் அவரது உடலை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன முத்துகிருஷ்ணனின் மனைவி சந்திரா கர்ப்பமாக இருந்துள்ளார்.

இதனிடையே மரணமடைந்த முத்துக்கிருஷ்ணின் இரண்டு கண்களும் உயிர்த் துடிப்பிலிருப்பதையறிந்த மருத்துவர்கள் உடனடியாக அவரது மனைவி சந்திராவைத் தொடர்புகொண்டு முத்துக்கிருஷ்ணனின் இரண்டு கண்களையும் தானமாகக் கேட்டிருக்கிறார்கள்.

கணவனைப் பறி கொடுத்த சோகத்திற்கிடையே சந்திராவும் அதற்குச் சம்மதித்து, தனது கண்வரின் கண்களை தானமாக வழங்கியுள்ளார்.நான்கு நாட்களே பிரசவத்திற்கு உள்ள நிலையில், அடுத்தவர் வாழ்வில் ஒளி விளக்கேற்றி வைத்த அவரின் தானக் கொடை அந்தப் பகுதியினரை நெகிழச் செய்திருக்கிறது.