விவாகரத்தில் முடியும் சமந்தாவின் திருமண வாழ்க்கை : நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தது காரணமா?

505

சமந்தா….

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இந்த காதல் தம்பதி, தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக செய்திகள் வந்துள்ளன.

இதற்கு முக்கிய காரணமாக, தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸில், சமந்தா நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தது தான் என்று தெரிவிக்கின்றனர்.

நடிகர்களுடன் சமந்தா நெருக்கம் காட்டி நடித்ததால், நாகசைதன்யாவிற்கும், சமந்தாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

நடிகை சமந்தா தனது பெயருக்கு பின்னால் நாகசைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை சேர்த்து இருந்தார்.

ஆனால், இந்த கருத்து வேறுபாட்டிற்கு பின், அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு S என்று மாற்றிக்கொண்டார். இதை வைத்தே இருவரும் பிரியப்போகிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

சமந்தாவையும், நாகசைதன்யாவையும் சேர்த்து வைக்க 4 முறை சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தும் விவாகரத்தில் இருவரும் உறுதியாக இருப்பதாக தெலுங்கு திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தங்களது விவகாரத்தை அதிகாரப்பூர்வமாக சமந்தாவும், நாகசைதன்யாவும், விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறுகின்றனர்.

விவாகரத்து பெறும்பட்சத்தில் சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நடிகர் நாகசைதன்யா ரூ.50 கோடி வரை கொடுக்க சம்மதித்து உள்ளதாக, ஒரு தெலுங்கு இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.