வீட்டில் தனியாக வசித்தவர் 2 வருடங்களின் பின் எலும்புக் கூடாக மீட்பு : நடந்தது என்ன?

344

ரமேஷ்….

சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவில் ரமேஷ் (49) என்பவர் வசித்து வந்தார்.

திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்ததோடு பல மாதங்களாக உற வினர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் அவர் சகோதரர் மகேஷ், ரமேஷை பார்க்க சென்றபோது, அவர் வீட்டில் இல்லாததால் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார்.

அப்போது துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கு ரமேஷ் எலும்புக்கூடு ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததார். அது ரமேஷின் எலும்புக்கூடு என தெரியவந்தது.

இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து, எலும்புக்கூடை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பினர். மேலும் ரமேஷ் கொ.லை செ.ய்.யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.