வெளியில் செல்லும் போது கதவுக்கு பூட்டு! காதலியை 10 ஆண்டுகளாக ஒரே அறையில் ரகசியமாக வைத்திருந்த காதலன்!!

536

இந்தியா…..

இந்தியாவில் காணமல் போன இளம் பெண் ஒருவர் பத்து ஆண்டுகளாக காதலனுடன் அறை ஒன்றில் ர.க.சி.யமாக தங்கி வந்த ச.ம்.பவம் தற்போது தெரியவந்துள்ளது.

கேரளாவின், அயிரூர் அருகே, கரக்கட்டுபரம்பைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர் கடந்த 2010-ஆம் ஆண்டு திடீரென மா.ய.மானார். இதனால் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் தேடி வந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் அவரை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், காணாமல் போன பெண், தன் வீட்டின் அருகில் உள்ள காதலன் வீட்டில், ஒரே அறையில், 10 ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வந்துள்ளார்.

அந்த அறையில் கழிப்பறை கூட இல்லை. இதனால், இரவில் மட்டும் வீட்டின் கதவு அல்லது ஜன்னலை திறந்து, அந்த பெண் வெளியே வந்துள்ளார். காதலன் வெளியே செல்லும் போது, அறையை பூட்டி விட்டு செல்வாராம்.

இது குறித்த தகவல் கிடைத்ததும், அவர்களை பி.டி.த்து, நீதிமன்றத்தில் நிறுத்தினோம். அப்போது, காதலனுடன் தான் வாழ்வேன் என, அந்த பெண் கூறியதால், இருவரையும் நீ.தி.மன்றம் விடுவித்து விட்டது. பெ.ண்ணின் குடும்பத்தினரும் இதை எ.தி.ர்க்கவில்லை என்று கூறினார்.