வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு இளைஞர்கள் பலி!!

295

விபத்துக்கள்..

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இன்று இடம்பெற்ற விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த ஐவரில் 27 வயதிற்குட்பட்ட நான்கு இளைஞர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய – தனமல்வில வீதியில் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், எம்பிலிப்பிட்டி – நோனகம வீதியின் 42 வது மைல் தொலைவில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தலை – ரம்பேவ பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், தம்புளை – குருநாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.