வேலை முடித்து வந்த காவலர் : நள்ளிரவில் நடந்த ப.யங்கரம் சம்பவம்!!

420

குமரேசன்…

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் ஆயுதப்படை வாகன பிரிவில் முதல் நிலை காவலராக குமரேசன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இவர், பாளையங்கோட்டையில் உள்ள மாநகர காவல்துறை காவலர் குடியிருப்பில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், பணி முடிந்து இரவு வீட்டிற்கு வந்த குமரேசன், ஓய்வு எடுப்பதாகக் கூறி, தனி அறைக்குச் சென்றுள்ளார்.

வெகுநேரமாக அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த மனைவி, உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாள்புரம் காவல்நிலைய போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.