வேலைக்கு சென்ற 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : கதறும் குடுப்பதினார்!!

270

சிவகங்கை….

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ரஞ்சனி (23). இவர் ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார்.

இவர் ராமநாதபுரத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ராமநாதபுரம் தேவிபட்டினம் நெடுஞ்சாலையில் வங்கிக்கு சென்று கொண்டிருந்த போது சாலையின் ஓரம் இருந்த மண்ணால் வாகனம் நிலை தடுமாறியதில் ரஞ்சினி வலது பக்கமாக விழுந்தார்.

அப்போது, அதே வழியில் திருச்சியில் இருந்து வந்த அரசு பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி ரஞ்சனி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ரஞ்சனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ரஞ்சனியின் தந்தை மும்பையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

அவருக்கு ரஞ்சனி மற்றும் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்து நடந்த இடத்தில் உள்ள கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.