ஷூட்டிங்கில் இயக்குநரை கடுப்பேற்றும் ஸ்ருதி ஹாசன் : இதுவா காரணம்?

333

ஸ்ருதி ஹாசன்..

பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கி வரும் படம் சலார். அந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். பிரபாஸும், ஸ்ருதியும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். ஹீரோ பிரபாஸ் தனக்கு சுவையான மதிய உணவு அளித்ததை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார் ஸ்ருதி.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு பிடித்த இயக்குநர்களில் ஒருவரான பிரசாந்த் நீலை கடுப்பேற்றி பார்ப்பது தான் தனக்கு பிடித்த விஷயம் என்று கூறி வீடியோ வெளியிட்டிருக்கிறார் ஸ்ருதி.

சலார் படம் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும். ஹைதராபாத்தில் இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை துவங்கவிருக்கிறார்கள். தெலுங்கில் எடுக்கப்பட்டு வரும் சலார் படம் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாள மொழிகளில் டப் செய்யப்படும்.

இதற்கிடையே எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஸ்ருதி ஹாசன் நடித்த லாபம் படம் கடந்த 9ம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.