ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினருக்கு நேர்ந்த பரிதாபம் : கதறும் மாஸ்டர் சில்வா!!

729

தூத்துக்குடியில் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினர் உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10-ஆம் வகுப்பு மாணவி உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், தன்னுடைய தங்கையின் கணவர் உயிரிழந்துள்ளதாக ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சில்வா தனது ட்விட்டரில், “எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை ஜெ. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை மிக்க வேதனையோடு பகிர்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், உயிரிழந்த தங்கை கணவரின் குண்டடிப்பட்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.