ஸ்மித், வார்னர் பற்றி அம்பலமானது மற்றொரு தகவல்

557

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கண்ணீர்விட்டு மன்னிப்பு கோரியது, பார்ப்பவர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், அவர் இவ்வாறு செய்வது இது ஒன்றும் முதல் முறையல்ல என்று அவுஸ்திரேலிய நடுவர் டேரல் ஹார்பர் அனுப்பியுள்ள மின்னஞ்சல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய நடுவர் டேரல் ஹார்பர் , ஸ்மித் மற்றும் வார்னர் குறித்து அவுஸ்திரேலியநடுவர்கள் தேர்வுக்குழு தலைவர் சைமன் டர்ஃபுல்லுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், 2016- ம் ஆண்டு நடந்த Sheffield Shield தொடரில், விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் நியூசவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய ஸமித்தும், வார்னரும் பந்தை சேதப்படுத்த முயன்றனர்.

அப்போது அவர்களை நான் எச்சரித்தேன். எனவே தற்போது நடந்துள்ள ஸ்மித்தின் இந்த நடத்தை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை, இரு மூத்த வீரர்களும் சேர்ந்து இளம் வீரரான பேங்க்ராப்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின்னடவை ஏற்படுத்திவிட்டனர்.

அவர்கள் தான், பேங்க்ராப்ட்டுக்கு இந்த ஐடியாவை வழங்கியிருக்க வேண்டும் என அவர் அனுப்பிய மின்னஞ்சல் காரணமாகவே அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஸ்மித், வார்னர் மீது கடுமை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது