ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றி காட்டிய மகள் ஜான்வி கபூர்!

603

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ‘தடக்’ படத்தில் நடித்து முடித்து தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி. இவர் ‘தடக்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுமாகியுள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ளது.இப்படம் வரும் ஜுலை 20ம் திகதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜான்வியை நாயகியாக்கிப் பார்க்க வேண்டும் என்று மறைந்த நடிகை ஸ்ரீதேவி மிகவும் ஆசைப்பட்டார். ஆனால், அதைப் பார்க்க முடியாமலேயே அவர் மறைந்துவிட்டார். ஆனால் அம்மாவின் ஆசையை ஜான்வி தற்போது நிறைவேற்றியுள்ளார்.